ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக “டிராகன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ‘ரைஸ் ஆஃப் தி டிராகன்’ மற்றும் ‘வழித்துணையே’ பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. ‘டிராகன்’ திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில்,டிராகன் படத்தின் முன்னோட்டம் பிப்ரவரி 10-ம் தேதி மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
