மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இதற்கு முன் அதிராத்ரம், அனுபந்தம், வர்தா, கரியில காட்டு போல, அடிமகள் உடமகள், ஹரிகிருஷ்ணன்ஸ், டுவென்ட்டி 20 ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படம் அவர்கள் இணையும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் தற்போது நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். இதனையடுத்து, அவர் கதாநாயகியாக நடிக்கிறாரா அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பது விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![மம்முட்டி- மோகன்லால் படத்தில் நயன்தாரா](https://uthayannews.ca/wp-content/uploads/2025/02/Mammootty-mohanlal-padathil-nayanthara.jpg)