கனடாவில் எமது தமிழ் மக்கள் அதிகளவு வாழும் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளும் மன்றத்திற்கான தேர்தல் 27ம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் சில தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். அவர்களில் சிலருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகளவில் உள்ளன.
அவர்களில் ஸ்காபுறோ கில்வூட் தொகுதியின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் யூட் அலோசியஸ் அவர்களும் ஒருவராக இருக்க வேண்டுமல்லவா?
மேற்படி தொகுதியில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் இவருக்கு வாக்களித்தால் ஆளும் கட்சி அரசாங்கத்தில் மேலும் ஒரு தமிழ் முகம் சபையை அலங்கரிக்கும்!