துபாய் அல் நாதா பகுதியைச் சேர்ந்த இந்திய மாணவி (வயது 15). இவர் பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். கடந்த 25-ந் தேதி இ-ஸ்கூட்டரில் மாணவி ஜுலேகா மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற வாகனம் திடீரென மாணவி சென்று கொண்டு இருந்த இ-ஸ்கூட்டர் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இந்த விபத்தில் இந்திய மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் இ-ஸ்கூட்டர் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
