விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ‘சுழல்- தி வோர்டெக்ஸ்’. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு, சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். அமேசான் பிரைமில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகமாக சுழல் 2 தி வோர்டெக்ஸ் தொடர் உருவாகி அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளதைப் போல சிறு தெய்வ வழிப்பாடு, அஷ்ட காளி திருவிழாவை கதைக்களத்தில் கொண்டு 8 பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்தும் அந்த குற்றத்தை யார் செய்தது என்பதை பரப்பரப்பாகவும் விறுவிறுப்பாகவும் தொடரை இயக்கியுள்ளனர். இளம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி இத்தொடர் பேசியுள்ளது. ஒவ்வொரு எபிசோடுகளும் விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்துள்ளனர். இன்வஸ்டிகேஷன் திரில்லர் ரசிகர்களுக்கு சுழல் 2 : தி வொர்டக்ஸ் வெப் தொடர் ஒரு விருந்தாக அமைந்துள்ளது.
