அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்த கனடா மீதான வரிவிதிப்பில் தளர்வு ஏற்படும் வகையில் சிறவற்றை இடைநிறுத்தம் செய்யும் வகையில் நேற்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் கெயெழுத்திட்டார் என்றசெய்தி வெளியான போது கனடாவில் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் சற்று ஆறுதல் அடைந்துள்ளதாக அறியப்படுகின்றது. கனடா மீதான டிரம்பின் சில வரிகளை விதிப்புக்களை ஏப்ரல் 2 வரை அமெரிக்கா இடைநிறுத்த உள்ளது; தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு வெளியே வரும் பொருட்களுக்கு வரிகள் இன்னும் வரிவிதிப்பு அமுலில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த தளர்வு தொடர்பான பத்திரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை ப கையெழுத்திட்டார், இதில் அமெரிக்காவிற்கு விற்கப்படும் தயாரிப்புகளின் மீதான கட்டணங்களை சற்று தாமதப்படும் எனவும் அறியப்பகிறது, இது மறு பேச்சுவார்த்தை வட அமெரிக்கா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் தோற்றம் மற்றும் உள்ளடக்கம் குறித்த விதிகளுக்கு இணங்குகிறது. எவ்வாறாயினும், இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதியில் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்ட 25 சதவீத கட்டணங்கள் அடுத்த வாரம் மார்ச் 12 அன்று திட்டமிட்டபடி அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறிருககையில், கனேடிய ஏற்றுமதியின் அளவு வர்த்தக ஒப்பந்த விதிகளுக்கு வெளியே எந்த அளவு வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள கனேடிய அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருந்தது, இன்னும் கட்டணங்களால் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் கனடாவின் பக்கம் உள்ளதாகவும் கனடாவின் பொருளாதார வல்லுனர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும்,கனடாவின் நிதியமைச்சர் டொமினிக் லெப்ளாங்க் அவர்கள். ஏப்ரல் 2 வரை கனடாவின் பதிலடி கொடுக்கும் எதிர்-கட்டணங்களின் இரண்டாம் கட்டத்தை 125 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதியில் தாமதப்படுத்தும் எனவும் அதே நேரத்தில் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க தயாரிப்புகளுக்கு எதிரான முதல் கட்ட வரிவிதிப்பு அமுலில் இருக்கும் என்று கூறினார்.
மெலும் ஒன்ராறியோ அரசாங்கமானது மின்சாரம் மீது 25 சதவீத ஏற்றுமதி வரியை விதிக்க மாகாண முதல்வர் டக் போர்ட் முடிவும் திங்களன்று . நியூயார்க், மிச்சிகன் மற்றும் மினசோட்டாவில் 1.5 மில்லியன் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் ஒன்ராறியோவின் மின்சாரத்தில் புதிய வரியை அறிவித்து முதல்வர் டக் போர்ட் உத்தரவை பிறப்பித்தார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் விதித்த கட்டணங்களை முற்றிலுமாக கைவிடும் வரை நாங்களும் அதை பின்பற்ற வேண்டும்” என்று கூறினார். அத்தடன் அமெரிக்க தயாரிப்புக்களான மதுபான வகைகள் எல்.சி.பி.ஓ என்னும் ஒன்றாரியொ மாகாணத்தின் அரச நிறுவனத்தின் விற்பனை நிலையங்களிலிருந்து அகற்றப்படும் எனவும் அவர் பகிரங்க அறிவிப்பை விடுத்துள்ளார்.