மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராவார். 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு இவர் இயக்கிய வாழை திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் இயக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்பொழுது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படத்தை இயக்குகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாரி செல்வராஜுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அவர்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “திரைமொழியில் மனிதம் பேசும் மகத்தான இயக்குநர். ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் வலியையும் – அவர்களுக்கான அரசியலையும் தனது படைப்புகளின் மூலம் இடைவிடாது பேசி வரும் ஆகச்சிறந்த படைப்பாளி மாரி செல்வராஜ் சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணிகள் மென்மேலும் சிறக்கட்டும் – கனவுகள் கைகூடட்டும். என் அன்பும், வாழ்த்தும்!” என கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி திரைப்படமான மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.