இசையமைப்பாளர் இளையராஜா இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்கிறார். இந்த சிம்போனிக்கு வேலியண்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளா.ர் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்.
