அந்தோணியாரின் வருடாந்த உற்சவத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ந.லோகதயாளன்.
இலங்கை இந்திய எல்லையில் உள்ள கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் மார்ச் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளிலேயே தற்போது நூற்றுக்கணக்கான இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் அனைவரது பார்வையில்
.விழாக் கோலம் பூணுகின்றது கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயம் என்றே சொல்லவேண்டும் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கச்சதீவு உற்சவத்தில் இலங்கை இந்திய யாத்திரிகர்கள் 9 ஆயிரம் பேர் பங்குபற்றவுள்ள நிலையில் இவர்களிற்கான தற்காலிக இறங்கு தளம், தங்ககம், பூசை மண்டபம் என்பவற்றுடன், உணவு ஏற்பாடு முதல் நீர் விநியோகம் வரையில் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம், கூடு வலம் வருதலைத் தொடர்ந்து மறுநாள் காலை விசேட திருப்பலிப் பூசையுடன் கொடி இறக்கத்தைத் தொடர்ந்து பூசைகள் நிறைவு பெறும் எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு (Kachchatheevu) பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிலையில் தற்பொழுது அங்கு விசேட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நெடுந்தீவு பிரதேச சபையின் ட்ரக்டர்கள் உட்பட கடற்படையினரின் வாகனங்களும் கப்பல்களும் இந்த ஏற்பாடுகளுக்காக பயன்படுததப்படுகின்றன..