– ஐங்கரன் விக்கினேஸ்வரா
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் மக்களின் துயரத்திற்காக அயராது பாடுபட்ட மனித உரிமை ஆர்வலரான டாக்டர் பிரையன் செனவிரத்னவின் மனைவி கமலினி ஒரு ஊக்கக் குரலாகவும் ஆதரவின் தூணாகவும் எப்போதும் இருந்தவர்.
அவுஸ்திரேலிய பிரிஸ்பேனில் தமிழ் சமூக ஆர்வலரான திருமதி கமலினி செனவிரத்ன கடந்த மார்ச் 6, 2025 அன்று மறைவடைந்தார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவரது அன்பான ஆதரவும், அவரது வசீகரமான குரல் அவரது தாராளமான விருந்தோம்பல் ஆகியவற்றை பிரிஷ்பேர்ன் தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
மிகக் குறிப்பாக இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கு அவர் காட்டிய உதவிகளை இங்கு வாழும் மக்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள்.
அவரது அசைக்க முடியாத நம்பிக்கையும், பெரும் சவால்களை எதிர்கொண்டாலும், அவர் எப்போதும் நெகிழ்ச்சியுடன் இருந்தவர். இருண்ட தருணங்களில் ஒளியைக் கண்டுபிடித்து, அனைவருக்கும் பலம் மிகுந்த ஊக்கத்தின் தூணாக தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளை புரிந்து பணியாற்றினார்.
‘சிங்கள கொட்டி’ என சிறிலங்கா அரசால் பறைசாற்றப்பட்ட டாக்டர் பிரையன் செனவிரத்னவின் மனைவிக்கு பிரிஷ்பேர்ண் தமிழ் சமூகம் தங்கள் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கை தமிழ் மக்களுக்கான மனித உரிமைகள் மற்றும் நீதிக்காக அயராது பாடுபட்ட டாக்டர் பிரையன் செனவிரத்னவுடன் அவரது மனைவி கமலினியும் இணைந்து பணியாற்றினார்.
கமலினி செனிவிரத்ன மண்ணிலிருந்து விடைபெறும் வேளையில், தமிழ் சமூகத்தின் குரலாக அவர் ஆற்றிய பணியைப் போற்றுவோம். அவர் இனி நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது ஆன்மா நம் இதயங்களில் என்றென்றும் வாழும் என்று பிரிஷ்பேர்ண் தமிழ் மக்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.