புதிய குரல் பத்திரிகையின் கனேடிய பதிப்பின் முதலாவது ஆண்டு விழா எதிர்வரும் 2025 மார்ச் 16ம் திகதி மாலை 4.30 க்கு ரொறன்ரோவில் உள்ள டேஸ்ட் ஒப் கொழும்பு ( TASTE OF COLOMBO ) கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
புதிய குரல் பத்திரிகை பப்ளிகேசன்ஸ் நிறுவுனர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் , பிரதம அதிதியாக கனேடிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் கெரி ஆனந்த சங்கரி கலந்து கொள்ளவுள்ளார்., விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சல்மா சாஹிட், சென்சௌன், மாகாண சபை உறுப்பினர்களான விஜய் தணிகாசலம், அன்ரியா ஹெசல், லோகன கணபதி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
ஈழத்திலிலிருந்து புலம்பெயர்ந்து பல ஊடகர்கள் கனேடிய தேசத்திற்கு வந்திருந்தாலும் அதில் சிலரே தொடர்ந்தும் சார்ந்த மக்களுக்கு ஊடகப்பணி செய்து கொண்டு வருகிறார்கள்., ஆனால் தனியான ஊடகத்தை உருவாக்கி அதன் மூலம் மனித உரிமை, நீதிக்காக குரல் கொடுக்கும் முக்கிய தேசத்தின் அன்பாளர்களாக உள்ள உதயன் பத்திரிகை ஸ்தாபகர் ஆர். என். லோகேந்திரலிங்கம் (மலையன்பன்) , யுகம் ஊடக வலயமைப்பின் ஸ்தாபகர் ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் ஆகியோர் பல்வேறு ரீதியில் பணிகளை செய்து வருகிறார்கள்.
புதிய குரல் 2018 முதல் வருடாந்தம் இருவருக்கு வாழ்நாள் ஊடக விருதுகளை வழங்கி வருகிறது, ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள முக்கியமான ஊடகர்கள் கடந்தகாலங்களில் இவ்விருதினை தங்கள் வசமாக்கி கொண்டுள்ளனர்.
இலங்கையில் மறுக்கப்பட்ட நீதி, இழைக்கபட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகம் பேசும் புதிய குரல் முதலாவது ஆண்டினை கனேடிய மண்ணில் நிறைவு செய்துள்ளது. இதற்கு பங்காளர்களாக இருந்த அனைவருக்கும் ஆசிரியர் பீடம் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறது