ந.லோகதயாளன்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை புரிந்தவரை கைது செய்ய வலியுறுத்தி வைத்தியர்கள் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்தனர்.
அநுபுரதம் வைத்தியசாலையில் பணியாற்றிய தமிழ்ப் பெண் வைத்தியரை பாலியல் வன் கொடுமை புரிந்ததாக நம்ப்ப்படும் இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இடம்பெறவுள்ள இன்றை போராட்டத்தில் வைத்தியர்கள் வித்தியாசமான வகையில் ஈடுபட்டனர்.
இது இவ்வாறிருக்க, கைதான நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், ஏற்கனவே குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் திங்கள் கிழமை இரவு 32 வயது பெண் வைத்தியரை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கல்நேவயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும், ஏற்கனவே குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.