கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் 8ம் திகதியன்று நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்
கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் கடந்த சனிக்கிழமையன்று 8ம் திகதி நடத்திய ‘சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் விழாக் கோலம் பூணக் கொண்டாடப்பெற்றது.
சம்மேனத்தின் தலைவரும் கணக்காளருமான அரி அரிகரன் அவர்கள் தலைமையுரையாற்றினார்.
அவர் தனது உரையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபையானது அங்கத்தவர்களின் ஆதரவோடும் வர்த்தகப் பெருமக்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என அனைத்து தரப்பினரோடும் கைகோர்த்து நின்று இங்குள்ள வர்த்தகச் சமூகம். கலைஞர் சமூகம். மற்றும் பொதுமக்கள் மகளிர் போன்ற அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கவும் அவர்களுக்கு பயன்படும் வகையில் இவ்வாறான விழாக்களை தவறாது நடத்தி வருகின்றதை பெருமையோடு அறியத் தருகின்றேன் என்று உவகையுடன் தெரிவித்தார்.
மேற்படி மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது மகளில் பெருமையினைக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நிரலில் பல விடயங்கள் இணைக்கப்பெற்றிருந்தன.
முக்கியமாக கூட்டுக் கலந்துரையாடல் ( சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவம் தொடர்பானது) நடனம் மற்றும் இசை அத்துடன் டாக்டர் புஸ்பா கனகரத்தினம் அவர்களின் உரை ஆகியன இடம்பெற்றன