அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் சவன்னா விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் நடுவானில் சென்றபோது டெலாஞ்ச் அகஸ்டின் (வயது 31) என்ற பயணி மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தட்டிக் கேட்டபோது அகஸ்டின் விமான பணிப்பெண்களையும் சரமாரியாக தாக்கினார். இதனால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். இதனையடுத்து புறப்பட்ட சவன்னா விமான நிலையத்துக்கே விமானம் மீண்டும் திரும்பியது. தரையிறங்கியவுடன் அங்கு தயாராக இருந்த விமான நிலைய காவல்துறை அகஸ்டினை கைது செய்தனர்.
