தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் ‘எல் 2 எம்புரான்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் மோகன்லாலுடன், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன்லால் ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் பிளின் நடித்துள்ளார். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை உலக அளவில் வெளியாக உள்ளது. படக்குழு அதற்கான புரமோஷன் பணியில் தீவிர இறங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று வெளியாக உள்ள ‘எல் 2 எம்புரான்’ படத்திற்கு பிரபல மலையாள நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, “எம்புரான் படத்தின் சரித்திர வெற்றிக்காக அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினர்களுக்கு எனது வாழ்த்துகள்! இது உலகெங்கிலும் உள்ள எல்லைகளைக் கடந்து முழு மலையாளத் துறையையும் பெருமைப்படுத்துகிறது என்று நம்புகிறேன். அன்புள்ள மோகன்லால் மற்றும் பிருத்விராஜுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
