மொழியை வைத்து பிளவு ஏற்படுத்த தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முயல்வதாக உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை; இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். இந்தி திணிப்பு மற்றும் பேரினவாதத்தை நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கிக்கான கலவர அரசியல் இதுவல்ல. கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நாடெங்கும் எதிரொலிப்பதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது. பாஜகவினரின் பேட்டிகள் மூலம் இது தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.