யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது-23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்திருக்கின்றார்.
அந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்றுவருகின்றது.