இயக்குனர் சி.மோகன்ராஜ் இயக்கத்தில் மருது புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படம் ‘சாணி’. இந்த படத்தின் மூலம் நடிகர் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் பள்ளிக்கூடத்தை மையமாக வைத்து உருவாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பூஜை, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. அந்த பூஜை கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இவர்களின் புகைப்படங்களை முன்னணியாக வைத்து மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டது.
