ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.17 மணிக்கு ஏற்ப்ட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. காஷ்மீர், டில்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
