ஆளுனர் ஆர்.என். ரவியை மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான தபால்காரர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சிப்பது அவர் வகித்து வரும் பதவிக்கு அழகல்ல என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்தார். இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆளுனரை தபால்காரர் என்று கூறுவது முதல்-அமைச்சருக்கு அழகு அல்ல…” ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு “எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது ஆளுனருக்கு அழகல்ல-” என்று சொல்லுங்களேன் நயினார் நாகேந்திரன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
