‘பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை’ போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘டி56’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் பதிவேற்றத்தை தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
‘மாரி செல்வராஜ், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது. ஆனால், அந்த படத்திற்கு முன்பு ஒரு தனுஷ் படம் உள்ளது. அதற்கு பிறகுதான் மாரிசெல்வராஜ் படம். அப்படத்தை அறிவிப்பதற்கு முன்னதாகவே இப்படத்தை அறிவித்துவிட்டோம். அந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார்.