மலையாள திரைப்படமான கொஹினூர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதை தொடர்ந்து யு டர்ன், விக்ரம் வேதா, ஜெர்சி, நேர்கொண்ட பார்வை , மாறா, இறுகப்பற்று போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை திரையுலகில் பிடித்தார். இந்நிலையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்ததாக கலியுகம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு டிஸ்டோபியன் உலகத்தில் நடக்கும் கதைக்களமாக உருவாகியுள்ளது. இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கலியுகம் படத்தை அறிமுக இயக்குநரான ப்ரமோத் சுந்தர் இயக்கியுள்ளார். டான் வின்சண்ட் இசையை மேற்கொண்டுள்ளார். இப்படத்தை ஆர்கே இண்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் வெளியீடு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மே9 ஆம் தேதி வெளியாகிறது.
