இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சுப்பிரமணியம் சுரேன் தலைமையில், 21-04-2025
அன்றையதினம் முள்ளிப்பற்று வட்டாரத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலேயே தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.