ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் ஆண்கள் ஆவார்கள்.
இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டு நடத்தப்பட்ட கோழைத்தனமான பஹல்கால் தாக்குதல் இந்திய குடியரசு மீதான நேரடி தாக்குதல் ஆகும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஒற்றுமை மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில் கருத்து வேறுபாடு மற்றும் பிரிவினை அரசியலை ஊக்குவிக்க பாஜக இந்த துயரத்தை பயன்படுத்திக் கொள்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன், காங்கிரஸ் காரியக் கமிட்டி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி அவர்களுடன் துணை நிற்கிறது.
இந்த கடுமையான ஆத்திரமூட்ட தாக்குதலை எதிர்கொள்ளும்போது அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டுகோள் விடுக்கிறோம். காங்கிரஸ் காரிய கமிட்டி அமைதியைக் கோருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உறுதியுடனும் ஒற்றுமையுடனும் எதிர்த்துப் போராடுவதற்கான காங்கிஸ் கட்சியின் நீண்டகால உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளது.