பு.கஜிந்தன்
அலரி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம், ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
26-04-2025 அன்று பிற்பகல் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
தொடர்ந்து உரையாற்றுகையில்,
அனைத்து மக்களும் சமனான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் அமைந்துள்ளது
இந்தப் பகுதிகளில் முப்பது வருடமாக யுத்தம் இடம்பெற்றது இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தாகள் பல கிராமங்கள் இழக்கப்பட்டன பலர் குழந்தைகளை இழந்தார்கள் தங்களுடைய உறவுகளை இழந்தார்கள் வீடுகளை சொத்துக்களை இழந்தார்கள்
நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். கடந்த காலங்களிலே பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாம்களுக்காக எடுத்திருக்கின்றார்கள். நாங்கள் இப்போது அந்த காணிகள் தொடர்பில் இராணுவ தலைவர்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றோம் விடுவிக்க கூடிய அனைத்து இடங்களையும் மீண்டும் மக்களுக்காக வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
அது மட்டுமல்ல பாரம்பரியமாக பயிர் செய்து வந்த நிலங்கள் கூகுள் வரைபடத்தின்படி வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் மக்களுடைய நிலங்கள் அவற்றை மீண்டும் அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
ஆகவே இன்னும் சில பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன கொழும்பிலே மூடி இருந்த பாதைகளை திறந்து இருக்கின்றோம். குறிப்பாக அலரி மாளிகைக்கு முன்பாக இருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம் எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை மூடி வைத்திருக்க வேண்டும் அனைத்து பாதைகளையும் இந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலே நாங்கள் திறந்து விடுவோம்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மூடிய பாதைகளை திறந்து விட்டிருக்கின்றோம். நாட்டை சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க இருக்கின்றோம். ஏற்கனவே வழங்கப்பட்ட புது திட்டங்களுக்கு நிதிகளை விடுவிக்க இருக்கின்றோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.