மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மக்களைதேடிமருத்துவம் வெறும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் – அது பலனையும் அளித்து வருகிறது. மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு 17% உயர் ரத்த அழுத்தம், 16.7% நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பொது சுகாதார வெற்றி எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை மறுவடிவமைக்கிறது. மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தில் அவர்களுக்காகக் காத்திருக்காமல் மக்களைச் தேடிச் சென்றடைவதன் மூலம் வெற்றிப்பெற்றுள்ளோம். இத்திட்டம் இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.