பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை அஜித்குமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் நிபுணர் செப் தாமு உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், டில்லி அதிபர் மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.நிகழ்வில், அதிபர் திரவுபதி முா்மு நடிகர் அஜித் குமாருக்கு பூத்ம பூஷண் விருதை வழங்கினார்.