28ம் திகதி நடைபெற்ற கனடிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் கௌரவ ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கனடியர்களால் மாத்திரமல்ல உலகெங்கும் வாழும் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட கனடியத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று லிபரல் கட்சியின் அரசாங்கமானது இன்னும் சில நாட்களில் பதவியேற்கவுள்ளது.
கடந்த 28ம் திகதி நடைபெற்ற மேற்படி கனடிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் மீண்டும் தனது Scarborough Guildwood-Rouge Parkதொகுதியிலிருந்து அதிக வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் நிச்சயமாக புதிதாக பதவியேற்கவுள்ள Mark Carney’ அவர்களின் அமைச்சரவையில் ஒரு அதி முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சராக நியமிக்கப்படுவார் என்பதும் நிச்சயமானதே!
இங்கே காணப்படும் படங்கள் தேர்தல் நடைபெற்ற தினமான 28ம் திகதி அன்றைய தினம் ஆங்காங்கே நடைபெற்ற ‘வெற்றிக் கொண்டாட்டங்களின் போது எமது புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பெற்றவையாகும்.
இந்த தேர்தலில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் வெற்றி பெற்ற பல லிபரல் கட்சியின் வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:-
Hon. Gary Anandasangaree – Scarborough Guildwood-Rouge Park- 35,342 Votes
Salma Zahid- Scarborough Centre-Don Valley – 27,542 Votes
Shaun Chen – Scarborough North- 29,428 Votes
Jean Yip- Scarborough Agincourt – 27,569 Votes
Michael Coteau – Scarborough Woburn- 22,534 Votes
Bill Blair- Scarborough South West- 33,390 Votes
Juanita Nathan -Pickering-Brookville – 38,548 Votes
Janiffer McKelvie Ajax – 29,345 Votes
இவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!