பாகிஸ்தானில் பலூசிஸ்தான் கிளர்ச்சிப்படை, தெக்ரிக் ஐ தலிபான் பாகிஸ்தான் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கும் , பாதுகாப்புப்படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு தனித்தனி சம்பவங்களில் 10 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கெச், ஜியாரத் மாகாணத்தில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து அந்நாட்டின் உளவுத்துறைக்குத் ரகசிய தகவல் வந்தது. இதனிடையே இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் படி, மாவட்டங்களில் தனித்தனி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 10 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்கப்பட்டன, அவர்கள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான ஏராளமான தாக்குதல்களிலும் பொதுமக்களைக் கொன்றதிலும் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
