நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. காலை அவருக்கான இறுதி சடங்குகள் நடைப்பெற்று அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. திரைத்துறையில் இருந்து ஏராளமானோர் வந்து கவுண்டமணியின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தவெக தலைவர் விஜய், கார்த்தி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நேரில் வந்து இறுதி அஞ்சலியை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
