மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கடந்த 26 நாட்களாக அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனைப் பொலிஸ்பிரிவிலனைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர். அதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று தெற்கு மற்றும் கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.