பு.கஜிந்தன்!
10-05-2025 அன்று சனிக்கிழமை , விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்துடன் இணைந்து மாங்குளம் DASH -Delven Assistance for Social Harmony நடாத்திய மாபெரும் இரத்ததான முகாமானது மாங்குளம் – ஒலுமடு சந்திக்கு அருகாமையில் நடைபெற்றது.
சுமார் 75 கொடையாளர்கள் குருதி கொடையாளர்கள் இந்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு குருதியை வழங்கினார்கள். இது விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 45வது விசேட இரத்ததானமுகாம் ஆகும். விதையனைத்தும் விருப்பமே செயற்திட்டத்தின் மூலம் இதுவரை காலமும் 𝟮𝟮𝟮𝟳 குருதிக்கொடையாளர்கள் குருதியை வழங்கியுள்ளதாக அந்த செயற்திட்டத்தை நடாத்துவோர் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் S.சண்முகப்பிரியா, பொது சுகாதார பரிசோதகர் T. ரவீனதாஸ், பொது சுகாதார பரிசோதகர் J .சாரங்கன், தாதியர்கள் அச்சுதானந்தன், ஐங்கரன் ஆகியோர் இந்த குருதிச் சேகரிப்பில் கலந்து கொண்டனர்.