மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் அடுத்ததாக நரி வேட்டை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இதற்கு முன் இவர் ஷேன் நிகாம் நடிப்பில் இஷ்க் திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. இப்படமே சேரன் நடிக்கும் முதல் மலையாள திரைப்படமாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படத்தின் வெளியீடு தேதி முதலில் மே 16 ஆம் தேதியாக இருந்தது. ஆனால் தற்பொழுது சில சூழ்நிலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்துள்ளனர். திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. அன்று மலையாளத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்த டிடெக்டிவ் உஜ்வாலன் மற்றும் ரஞ்சித் சஞ்சீவ் நடித்த யுனைடட் கிங்டம் ஆஃப் கேரளா மற்றும் அசாதி ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.
உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.