கடந்த 10ம் திகதி சனிக்கிழமையன்று Manoj Rajasri Law-Legal Leo, சட்ட நிறுவனத்தின் திறப்பு விழா ஸ்காபுறோவில் சிறப்பாக நடைபெற்றது
Manoj Rajasri Law-Legal Leo, என்னும் சட்ட நிறுவனத்தின் திறப்பு விழா கடந்த 10ம் திகதி சனிக்கிழமையன்று மதியம் 105/ 2855, Markham Road IN Scarborough. என்னும் விலாசத்தில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் சுகாதார அமைச்சின் இணையமைச்சர் விஜேய் தணிகாசலம் மற்றும் முதியோர் விவகார அமைச்சர் Raymond Cho. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் அழைக்கப்பட்டிருந்தனர்.
இணையமைச்சர் விஜேய் தணிகாசலம் அவர்கள் சமூகமளித்திருக்க சட்டத்தரணி மனோஜ் அவர்களின் பெற்றோர் திரு.திருமதி ராஜஶ்ரீ தம்பதி நாடாவை வெட்டி புதிய சட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து அவரும் அமைச்சர் Raymond Cho. அவர்களும் இன்னும் பல பிரமுகர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
புதிய சட்டத்தரணி மனோஜ் ராஜஶ்ரீ அவர்களும் அவரது தந்தையார் ராஜஶ்ரீ அவர்களும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்கள். சட்டத்தரணி மனோஜ் ராஜஶ்ரீ அவர்களும் உரையானது கலகலப்பாகவும் அங்கு கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்துவதுமாக அமைந்திருந்தது.