பாமக மூத்த நிர்வாகியாக இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘படையாண்ட மாவீரா’ படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், இயக்குனர் கவுதமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமக மூத்த நிர்வாகியாகவும் பதவி வகித்த மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையப்படுத்தி, ‘படையாண்ட மாவீரா’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கவுதமன் எடுத்துள்ளார். இப்படம் வருகிற 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தனது கணவரின் வாழ்க்கையை சித்தரித்து படம் எடுக்க தங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதால் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி, காடுவெட்டி குருவின் மனைவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக இயக்குனர் வ.கவுதமன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
