கடந்த சனிக்கிழமையன்று 17ம் திகதி (17-05-2025 ) விற்பி நகரில் நடைபெற்ற ‘சக்தி நர்த்தனாலயா நுண்கலைக் கூடத்தின் ‘நாட்டிய மாலிகா’ பரதநாட்டிய விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
‘சக்தி நர்த்தனாலயா நுண்கலைக் கூடத்தின் குருவும் நிறுவனருமான ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கருடன் இணைந்து அவரது குடும்பத்தினர் மற்றும் பெற்றோர்கள் மற்றும் நண்பரம்கள் இணைந்து ஏற்பாஹடு செய்த இந்த அற்புதமான நாட்டிய விழாவில் அனைத்து உருப்படிகளும் அழகாகவும் சலிப்பின்றி ரசிக்கக் கூடியதாகவும் அமைந்திருந்தன.
குறிப்பான அன்று மேடையேறிய ‘யாழ்ப்பாண நூலக எரிப்பும் அழிப்பும்’ என்ற நாட்டியத்தில் அனைத்து மாணவிகளும் குரு ஶ்ரீமதி ஜனனி ரவிசங்கரும் பங்கெடுத்தனர்.
மேற்படி நடனம் தாயக உணர்வையும் எம் மண்ணின் பெருமையையும் நூலக அழிப்பின் துயரங்களையும் சிங்கள இனவாதப் போக்கை வர்ணித்தும் எழுதப்பட்ட கவிதை வரிகளுக்கு நடன மணிகள் நடனங்களை வழங்கினார்கள். அப்போது பார்வையாளர்கள் பக்கத்தில் பலரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததையும் உணரக்கூடியதாக இருந்தது என்றால் அது மிகையாகாது. கவிதை வரிகளை கலைஞரும் எழுத்தாளருமான டாக்டர் போல் ஜோசப் அவர்கள் உணர்வோடும் மேடையில் சமர்ப்பணம் செய்தார்.
மாணவிகள் வழங்கிய ‘தில்லானா’ நடனம், அழைகையும் அர்த்தத்தையும் உணர்த்தும் அற்புதத் தன்மை கொண்டதாக விளங்கியது.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நடன ஆசிரியையும் ஜனனி ரவிசங்கர் அவர்களது குருவுமாகிய ஶ்ரீமதி அற்புதராணி கிருபைராஜ், ஜனனி ரவிசங்கர் அவர்களையும் மாணவிகளையும் பாராட்டி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
விழாவின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அழகிய முறையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வஞ்சித்தா சுஜன்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
படங்கள்: சத்தியன்