கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ரூ. 40 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,175 பயனாளிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், உதயநிதி ஸ்டாலின் இன்று (24.5.2025) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1,175 பயனாளிகளுக்கு 40,05,31,067 ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 125 நரிக்குறவர்களுக்கு (பழங்குடியினத்தவர்கள்) 3,59,61,812 ரூபாய் மதிப்பிலான இடங்களுக்கான வீட்டுமனைப் பட்டாக்களையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் வழங்கினார். தொடர்ந்து 1,000 நபர்களுக்கு (125 நரிக்குறவர்கள் உள்பட) கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் 35,00,00,000 மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் 50 பயனாளிகளுக்கு ஆட்சேபணையற்ற புறம்போக்கில் வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,45,69,255 ரூபாய் மதிப்பிலான இடங்களுக்கான பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்வில் நரிக்குறவர் இனத்தவர்கள் துணை முதல்-அமைச்சருக்கு பாசிமாலைகளை அணிவித்து மகிழ்ந்தார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களது குழந்தைகளுக்கு துணை முதல்-அமைச்சர் பெயர் சூட்டினார்.
இந்நிகழ்ச்சியில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்துல்லா, .துரை வைகோ, செல்வி.எஸ்.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராஜா, சின்னத்துரை, எஸ்.டி.ராமச்சந்திரன், தாட்கோ தலைவர் இளையராஜா, மாவட்ட ஆட்சியர் அருணா, இ.ஆ.ப., புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.