தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தை தொடர்ந்து நானி, ‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். திரைப்படம் இதுவரை உலகளவில் 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மே 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்கிள் பார்க்க தவறவிட்டவர்கள் ஓடிடியில் பார்த்து மகிழுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.
