அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை இந்தியாவுக்கு எப்போதுமே போட்டி நாடுகளாக உள்ளன. இவ்விரு நாடுகளின் எல்லைகளில் இந்தியாவுக்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் மூண்டபோது, இருநாடுகளும் மோதலை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டபோதிலும் சீனா பாகிஸ்தானுக்கே ஆதரவு தெரிவித்தது. இந்த சூழலில் இந்தியா, சீனாவைத்தான் தனது முதல் எதிரியாக கருதுவதாக அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பான டி.ஐ.ஏ. நடப்பு ஆண்டுக்கான உலகளாவிய அச்சுறுத்தல் பற்றிய தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானை நிர்வகிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு பிரச்சினையாக இந்தியா கருதுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
