முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தின் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் பிரமாண்டமாக இடம் பெற்றன
இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இராணுவம் பொலிசார் நிலைகொண்டுள்ள விடயத்தை ஊடகங்களையும் ஒளிப்பதிவு செய்ய அனுமதி மறுத்து வருகின்றனர்