கனடாவில் ஸ்காபுறோ நகரில் மார்க்கம் வீதியில் இயங்கிவரும் சபரிமலை ஐயப்பன் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் உணவு வங்கிக்கு உலர் உணவுப் பொருட்கள் சேகரிக்கும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை 2721 Markham Rd Scarborough- யுனிட் 30. , ON M1X 1L5 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலய வளாகத்தில், பொது மக்களிடமிருந்து உலர் உணவுப்பொருட்கள் மற்றும் ரின்களில் அடைக்கப்பெற்ற பழங்கள் அல்லது உணவுப் பொருட்கள் ஆகியன ஏற்றுக் கொள்ளப்படும். இதற்காக தொண்டர்கள் பலர் அன்றைய தினம் பணியில் இருப்பார்கள்
அன்றைய தினத்திற்கு முன்னரும் உணவுப் பொருட்களை வழங்க விரும்பும் அன்பர்கள் மற்றும் அடியார்கள் ஆலயத்திற்கு நேரடியாக வந்து உணவுப் பொருட்கள் ஒப்படைக்கும் இடத்தில் கையளிக்கலாம்.
கனடாவில் பல வருடங்களாக இயங்கிவரும் உணவு வங்கி ஒன்றிடம் அலுவலக நிர்வாகத்தினால், சேகரிக்கப்படும் பொருட்கள் ஒப்படைக்கப்படும்.
கனடாவில் உணவின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் நடைபெறும் இந்த நற்காரியத்தில் அனைவரும் நேரடியாகப் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர்
மேலதிக விபரங்களுக்கு:-
நவநேசன்: 416 648 3373, தனிநாயகம்: 416 457 4300,
குலசிங்கம்:416 565 3000, மதிவாசன்: 416 843 8424 மற்றும் ஆலயம்: 416 335 7700 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்