இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமது உணவுத் தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்கு உலர் உணவு பொருட்களை தந்துதவுமாறு வவுனியா வடக்கு மன்னக்குளம் கிராம உத்தியோகத்தர் ஊடாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் மன்னக்குளம், கொள்ளபுளியங்குளம் மற்றும் குஞ்சுக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு ரூபா 46,215 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
