பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் கடந்த கால நிலைமைகளினால் தமது பிள்ளைகளையும் உறவுகளையும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினாலும் காலநிலை யினாலும் பாதிக்கப்பட்டுள்ள 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 50 குடும்பங்களுக்கு தலா ரூபா 2,000 பெறுமதியில் உலர் உணவு பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.