இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் .
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம்,மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனம் ,தேசியமீனவர் ஒத்துழைப்பு இயக்கம்,முல்லைத்தீவு பிரதேச வர்த்தக சங்கம்,முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்,கரை துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம்,பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம்,முல்லைத்தீவு சிகை அலங்கரிப்பாளர் சங்கம்,கரைதுறைப்பற்று கிராமிய அபிவிருத்தி சங்கம் ஆகியன போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளார்கள்