மருதனார்மடம் கொத்தணியில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவிகளான இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் கல்லூரி மாணவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட கீரிமலை கூவில் என்ற பகுதியைச் சேர்ந்த சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்பத்தாருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.