யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய, 10 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மருதனார்மடம் சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுக்கூடத்தில் சங்கானை சந்தையை சேர்ந்த 100 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் சங்கானையை சேர்ந்த 4 பேர், உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய், வடலியடைப்பு பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் என 8 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூட சோதனையில் ஏழாலையை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது