(மன்னார் நிருபர்)
(17-12-2020)
சுய தேவை பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவில் உருவாகி தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பத்து இலட்சம் மனைப் பொருளாதார செயற்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 2 ஆயிரம் பயனாளிகளுக்கான விவசாய உற்பத்தி, விதை இனங்கள் வழங்கும் நிகழ்வில் முதல் கட்டமாக 50 பயனாளிகளுக்கு இன்று வியாழக்கிழமை மாலை (17.12.2020) விதைப்பொதிகளை வழங்கி வைக்கப்பட்டது.
-மன்னார் நகர பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து கொண்டு முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு விதைப்பொதிகளை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் எம். பிரதீப் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. சகீலா பானு , பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.