வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்திரம் சுகிர்தன் பயணித்த அலுவலக வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்று சுமார் ஒரு மணிநேரத்துக்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துடன், தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவரை கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.