இரணைமடுக் குளத்தின் இரண்டு வான் கதவுகள் 5 மணியளவில் 6 அங்குலங்களால் திறக்கப்பட்டுள்ளன..
இணைமடு நீரேந்தும் பகுதியில் பெய்த மழை காரணமாக நீர் வருகை அதிகரித்தமையால் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் குளத்தை பார்வையிட்டு பின்னர் கதவுகளை திறந்துவிட்டனர்.
36 அடிகொள்ளளவு கொண்ட குளம் 33 அடி 06 அங்குலமாக தற்போது காணப்படுகிறது.
நீர் வருகை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் மேலும் கதவுகள் திறக்கப்படும் எனவும், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.