மன்னார் நிருபர்)
(30-12-2020)
மன்னார் மாவட்டத்தில் அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கனிய மண் ஆய்வு மற்றும் மன்னார் மாவட்டத்தில் குறித்த நிறுவனம் மேற்கொள்ள உள்ள கனிய மண் அகழ்வு தொடர்பாகவும் மண் மற்றும் கனிய வள சுரண்டல்களை சட்ட ரீதியாக அனுகுவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையில் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினால் இன்று புதன் கிழமை காலை மன்னார் கறிற்றாஸ் வாழ்வுத கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்திலே மன்னார் மாவட்ட எல்லை பகுதியில் அரச அனுமதியுடனோ அல்லது அரச அனுமதி இன்றியோ சட்ட ரீதியாகவோ சட்ட முரணாகவோ மண் அகழ்வு மேற்கொள்ள அனுமதிக்க போவதில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் வளங்கள் பயன்பாடு தொடர்பாக நாடளாவிய ரீதியில் காணப்படும் சட்டங்கள் தொடர்பாகவும் அவற்றை பாதுகாப்பதற்காக நீதி மன்றங்களை பயன் படுத்துவதற்கு ஏதுவான காரணங்கள் தொடர்பாகவும் சுற்றாடல் நீதிக்கான அமைப்பின் விரைவுரையாளர்களால் இன்றைய தினம் புதன் கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே மேற்படி தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடங்களில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் இடம் பெற்றுள்ள கனிய வள ஆய்வு செயற்பாடு தொடர்பாகவும் அவற்றை கையாள்வதற்கான அனுகு முறைகள் தொடர்பாக கனிய அகழ்வை தடுப்பதற்கான பல்வேறு தெளிவு படுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் ,சமூக ஆர்வளர்கள் சூழலியளாலர்கள், பிரஜைகள் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.